தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்!!!
10/06/2023
0
தேனி மாவட்டம் கம்பம் செல்லும் சாலையில் நல்லதண்ணீர் குழாய் பதிக்கும் பணி நீண்ட நாட்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். கோவிந்தன்பட்டி-கம்பம் செல்லும் சாலையில் ஆமை வேகத்தில் குழாய் பதிக்கும் வேலை நடைபெறுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும், குழாய் பதிப்பத்தால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஒட்டிகள் சிரமம் அடைகின்றனர். இந்த குழாய் பதிக்கும் பணியானது இரவு நேரங்களில் நடந்தால் பொதுமக்கள் சிரமம் அடைய மாட்டார்கள் என்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.தேனி மாவட்ட நிர்வாகமானது பொதுமக்களின் நலன் கருதி குழாய் பதிக்கும் பணியை இரவில் செய்யவும் மேலும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
