சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரவேல் என்பவரது மகன் லோகேஷ்வரன் (17) என்ற சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து புழல் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் சுழலில் சிக்கிய சிறுவன் கடந்த இரண்டு நாட்களாகியும் காணவில்லை. இதனை தொடர்ந்து காணாமல் போன சிறுவனை
தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடி வரும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் சிறுவனின் உடல் கிடைக்காததால் தேடுதல் பணி தொய்வடைந்தது. இதனிடையே சிறுவனின் உடல் இன்று ஏரியில் கறை ஒதுங்கியதால் அருகில் இருந்தவர்கள் டேங்க் பேக்ட்ரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலை தொடர்ந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து காவல்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
