தேனி மாவட்டம் போடி நகராட்சி துறையினர் நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைப்பார்களா பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!!
10/09/2023
0
போடி நகராட்சியில் உள்ள பெரியாண்டவர் கோவில் தெருவில் வாகனங்களால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இந்த பெரியாண்டவர் கோவில் தெருவில் யூனியன் பாங்க், தனியார் கிளினிக்,கோவில் போன்ற இடங்கள் இருப்பதால் வாகன ஒட்டிகள் சாலைகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். சாலைகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும்,அவசர காலங்களில் இத்தெருவில் அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் அடைவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் சமீபகாலமாகதான் இந்த போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறுகின்றனர். அரசு அதிகாரிகளும் இப்பகுதியை வந்து பார்வையிடுவதில்லை என்றும் தேர்தல் வந்தால் மட்டும் தான் இப்பகுதிக்கு வருவார்கள் எனவும் பொதுமக்கள் புலம்புகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியை போடி நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து இடையூறுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் வேண்டும் என மக்கள் ஒற்றை கருத்து தெரிவிக்கின்றனர்.
