விருதுகள் வழங்கிய தமிழக முதல்வர்!!!
10/03/2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களை சிறப்பிக்கும் வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., அவர்களுக்கும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆர். வி. சஜீவனா, இ.ஆ.ப., அவர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.
.jpg)