ஆண்டிபட்டி பாலாஜி நகர் பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை தேங்கியுள்ளதால் அப்பகுதியில் நோய்தொற்று பயத்துடன் பொதுமக்கள் இருந்து வந்தனர்.மேலும், கால்நடை சாணங்களால் அப்பகுதியில் தற்போது பெய்து வரும் கனமழையால் கால்நடை சாணங்கள் மழைநீரில் தெருக்களில் ஓடும் அவல நிலை ஏற்பட்டது.மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அடிக்கடி நோய்தொற்று ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.இதுகுறித்து ஆண்டிபட்டி பேரூராட்சியின் துப்புரவு ஆய்வாளர் சூர்யகுமார் அவர்கள் நேரடி பார்வையிட்டு தேங்கியுள்ள சாக்கடையை துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றியும், கால்நடை சாணங்களை அகற்றியும், மேலும், கால்நடை சாணங்களை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் மலைபோல் குவித்து வைத்திருப்போரிடம் அதனை அகற்ற
கால அவகாசம் தந்தும் துரித நடவடிக்கை மேற்கொண்டார். துப்புரவு ஆய்வாளர் சூர்யகுமார் அவரின் இந்த நடவடிக்கையால் ஆண்டிபட்டி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பொதுமக்களுடன் சேர்ந்து நமது Sen நியூஸ் media நெட்ஒர்க் குழுமமும் துப்புரவு ஆய்வாளர் சூர்யகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

