கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்: இன்னும் இருக்கிறார்கள் மனிதர்கள்!மறையவில்லை..மனிதநேயம்!! கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்!!

sen reporter
0

இன்னும் இருக்கிறார்கள் மனிதர்கள்!மறையவில்லை..மனிதநேயம்!!

சாலை ஓரம்  நிர்வாண நிலையில் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த சினேகம் பெற்றோர் இல்ல நிறுவன தலைவர்!!

குமரி மாவட்டம் நாகர்கோவில்  வெட்டுர்ணி மடத்திலிருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை முன்பு 
சாலையோரம் 35 வயதிற்கு மேல்  மதிக்கத்தக்க சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட  பெண் ஒருவர் தன்னுடைய உடம்பில் எந்த ஒரு ஆடையும் இன்றி  நிர்வாண நிலையில் படுத்திருந்தார்.

 இதனை கண்டதும் அப்பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் சுரேஷ் சினேகம் பெற்றோர் இல்லம் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் லதா கலைவாணனுக்கு தகவல் கொடுத்து அப் பெண்மணியை உடனடியாக மீட்குமாறு தகவல் கொடுத்துள்ளார்.

 அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயலில் இறங்கிய சினேகம் தொண்டு நிறுவனத்தினர் அங்கு சென்று முழு நிர்வாணமாக கிடந்த அந்தப் பெண்ணுக்கு தாங்கள் கொண்டு வந்த  புதிய ஆடையை நிறுவன ஊழியர்கள் அணிவித்தனர்.
 மேலும் லதா கலைவாணன் அப்  பெண்ணிடம் விசாரித்ததில் அவர் 
செபஸ்தியாள் (39) D/O தங்கப்பழம் என்பது தெரிய வந்தது.

 இதைத் தவிர மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வேறு எந்த தகவலும் தனக்குத் தெரியாது என்று கூறியதால் மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினியை தொடர்பு கொண்டு அங்கு நடந்த எல்லா விஷயங்களையும் லதா கலைவாணன் எடுத்துக் கூறினார். உடனே சமூக நல அலுவலர் 
சரோஜினி அப்பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க முன்வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு குமரி மாவட்டம் தடிக்காரன் கோணத்தில் இயங்கி வரும் அசிசி மனநல பெண்கள் காப்பகத்தில் அப்பெண்னை ஒப்படைக்கும் படி அறிவுறுத்தியதின் அடிப்படையில் மீட்கப்பட்ட அப் பெண்  பத்திரமாக  தடிக்காரன்கோணம் அசிசி மனநல ( பெண்கள்) காப்பகத்தில் கொண்டு சேர்க்கப்பட்டார்.

 சாலையோரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் முற்றிலும் ஆடைகள் இன்றி நிர்வாணமாக கிடந்த செய்தி கேட்டு துரித நடவடிக்கையில் தன் பணியாளர்களுடன் இறங்கி அந்தப் பெண்ணை  மீட்டு அவருக்கு ஆடை அணிவித்து காப்பகத்தில் ஒப்படைத்த சினேகம் பெற்றோர் இல்ல நிறுவன தலைவர் லதா கலைவாணனின் மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்!!

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top