தேனி மாவட்டம்: சின்னமனூரில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி நிகழ்ச்சி!!!
11/27/2023
0
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சின்னமனூரில் எம்எம்எஸ் மற்றும் எழுச்சி பெண்கள் கூட்டமைப்பினர் இணைந்து மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்வானது எழுச்சி பெண்கள் கூட்டமைப்பு தலைவர் சங்கரேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்வில் காவல்ஆய்வாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து எஸ்எம்எஸ் செயலாளர் தேவபிரதிக், குடும்ப வன்முறை திட்ட பணியாளர் பாக்கியலட்சுமி இவர்களுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
