சென்னை மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் 194வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட ராயல் என்கிளேவ்,2nd அவென்யூ, ராஜன் நகர் மற்றும் செல்வா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி வெளியேற வழியில்லாமல் இருந்தது.மேலும், சாலையைங்கும் சேரும், சகதியுமாக காணப்பட்டது.இதனை தொடர்ந்து
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கேள்விக்குறியானது. இந்த நிகழ்வை கருதி மழைநீர் தேங்கிய இடங்களை கவுன்சிலர் விமலா கர்ணா பார்வையிட்டு உடனுக்குடன் மோட்டார் கொண்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கவுன்சிலர் விமலா கர்ணன் அவர்கள் பொதுமக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
