திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜவீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் தொடர் மக்கள் கூட்டத்தால் செங்கத்தினை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் பறிதவிக்கின்றனர். இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருப்பதால் அதிகளவில் மக்கள் வருகின்றனர். மேலும்,வங்கியில் பணம் எடுப்பதற்கும்,பணம் போடுவதற்கும் ஒரே கவுண்டர் மட்டுமே இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி வங்கியில் மேலும் பணம் போடவும், எடுக்கவும் புதிய கவுண்டர் தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களின் கூட்ட நெரிசலை குறைப்பதற்கும்,மேலும் வங்கியே விரிவுபடுத்தவும் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் வங்கியில் பணியாளர்கள் பணி நேரத்தில் தாங்கள் விருப்பத்திற்கு வேலை செய்கின்றனர். ஆகையால் மக்கள் காத்திருப்பு நேரத்தை வீணாக்கும் வகையில் பணி செய்யும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஆகையால் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
