திருச்சி: ஏழாயிரம் ஆசிரியர்களின் கோரிக்கை மனு... மாண்புமிகு முதல்வர் முன்னெடுப்பாரா? கல்வித் துறை கவனிக்குமா?

sen reporter
0


 தொலைநோக்குடன் சிந்திப்போம் !

கல்வியை சீரமைப்போம் !!

மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட 7000 ஆசிரியர்களும் ஒன்று கூடி கோரிக்கை மனு அளிக்கும் விதமாக திருச்சி மாநகரில் மாநாடு நடத்துவது என்று 19ம் தேதி திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் ஊதிய மீட்புக்குழு சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்!


தமிழ்நாட்டிலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாநில பதிவுமூப்பின் அடிப்படையில் 2009ம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது பொற்கரங்களால் (அன்றைய துணை முதலமைச்சர்), மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலையில் (அன்றைய கல்வி அமைச்சர்) ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த 7000 இடைநிலை ஆசிரியர்களின் நியமனம் கீழ்கண்டவாறு அமைந்தது.



ஆசிரியர் தேர்வு வாரிய விளம்பரம் - விளம்பர எண். 1 / 2009 - நாள்.12.01.2009ன் படி

விண்ணப்பம் வழங்கும் தேதி ஆரம்பம் - 22.01.2009,

விண்ணப்பம் வழங்கும் தேதி முடிவு - 09.02.2009,

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் - 11.02.2009.


இவ்வாறு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட ஊதிய விகிதம் - 4500-125-7000 ஆகும்.

மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியலை வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பிய நாள் - 20.01.2009, 05.02.2009 & 13.02.2009.


www.employment.tn.gov.in/sgtsel.asp இணையதளத்தில் மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியான தேதி - 20.02.2009.

இந்நிலையில் ELECTION COMMISSION OF INDIA SCHEDULE FOR GENERAL

ELECTIONS, 2009 அறிவித்த நாள் - 02.03.2009 (No. ECI/PN/13/2009)


இதனால் லோக்சபா தேர்தல் - 2009 அறிவிப்பு எதிரொலியால் இடைநிலை ஆசிரியர் நியமன

சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்திவைக்கப்பட்டு செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டது.


அதன்பின்பு ஆசிரியர் தேர்வு வாரிய குறிப்பாணை எண்.5015/ஆ4/2008 நாள்.14.05.2009ன்படி

ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.


 சரிபார்ப்புக்கான அழைப்புக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஊதியவிகிதம் - 4500-125-7000.

சான்றிதழ் சரிபார்த்தல் 31.05.2009க்கு முன்பே நிறைவடைந்து. ஆசிரியர் தேர்வு வாரிய குறிப்பாணை எண்.5015/ஆ4/2008 நாள்.22.06.2009ன் படி TRB ஆல் Selection Order வழங்கப்பட்டது.


TRB ஆல் வழங்கப்பட்ட Selection Order-ல் குறிப்பிடப்பட்ட ஊதிய விகிதம் -4500-125-7000


இவ்வாறு, 2009ஆம் ஆண்டு நியமனமான இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.06.2009க்கு முன்பே அனைத்துவிதமான நியமன நடைமுறைகளும் (Selection Process) நிறைவு பெற்று Selection Order உள்ளிட்ட நியமன நடைமுறைகள் சார்ந்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆணைகளிலும் 4500-125-7000 ஊதிய விகிதம் குறிப்பிடப்பட்டு, பணியில் சேரும்போது 4500-125-7000 ஊதிய விகிதத்திற்குரிய 6-வது ஊதியக்குழு Entry Level Pay 8370+2800தரஊதியம் வழங்காமல் 5200+2800தரஊதியம் மட்டும் குறிப்பிடப்பட்டதால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3170/- (8370 - 5200 = 3170) ஊதிய இழப்பு ஏற்பட்டது.


இந்த ஊதிய இழப்பை சரிசெய்வது குறித்து அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களிடம் ஆசிரியர் சங்கங்கள் மூலம் முறையிட்ட நிலையில் தற்காலிக தீர்வாக தனிஊதியமாக ரூ.750 வழங்கப்பட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த 7000 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு நிச்சயமாக சரிசெய்யப்பட்டு நிரந்தரத்தீர்வு எட்டப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.


இந்நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் மீண்டும்


திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி அமைந்துள்ளதால், எங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீதும், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் மீதும், மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் மீதும்,

அரசின் மீதும், முழு நம்பிக்கையுடன் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடாமல் காத்திருக்கின்றோம்.


இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக்கோரிக்கையை சரிசெய்யும் நோக்கில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் (செலவினம்) அவர்கள் தலைமையில், மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி


இயக்குநர் அவர்கள் ஆகியோர் அடங்கிய மூவர்குழு அமைக்கப்பட்டுள்ளது. மூவர்குழுவில் எங்களது


கோரிக்கை சார்ந்த கருத்துரு சமர்பிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டுவருகிறது.


எனவே, மூவர்குழு மூலம் எங்களது 14ஆண்டுகால கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற


நம்பிக்கையுடன், மூவர்குழு அமைத்து எங்கள் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை மேற்கொண்டுள்ள,

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும்,

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களில் சுமார் 2000 ஆசிரியர்கள் எவ்வித பலனுமின்றி விரைவில் ஓய்வுபெறும் நிலையில் இருப்பதாலும், ஊதிய பாதிப்பை கருணையுடன் முழுமையாக சரிசெய்ய வேண்டி

மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட 7000 ஆசிரியர்களும் ஒன்று கூடி கோரிக்கை மனு அளிக்கும் விதமாகவும் திருச்சி மாநகரில் மாநாடு நடத்துவது என்று 19.11.2023ம் நாளன்று திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் ஊதிய மீட்புக்குழு சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.


அத்துடன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கோரிக்கை சார்ந்த மனு ஆகியவை மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அனைத்து கல்வி ஒருங்கிணப்பாளர்களும் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சிகரம் சதீஷ் அவர்களிடம் வழங்கப்பட்டது.


கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.


7000 இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்,

நீ.இளையராஜா,ச.முனீஷ்,

மு.முருகையா ஆகியோர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top