வழிகாட்டும் குறள் மணி (47)
குறள்(478)
" ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
பொருள்:
வருகின்ற வழி சிறிதாயினும் அப்பொருள் போகின்ற அளவு பெருகாதிருந்தால் கெடுதல் இல்லை.
விளக்கம்:
மாதம் ரூபாய் பத்தாயிரம் சம்பாதித்தாலும் அதற்குள்ளாக மாத செலவை வைத்துக் கொண்டால் கேடில்லை.
மாதம் ஒரு லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டினாலும் அதைக் காட்டிலும் அதிகமாக மாத செலவு இருந்தால் கேட்டில்தான் முடியும்.
.jpg)