கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட சகாயநகர் ஊராட்சி அனந்த பத்மநாபபுரம் விளையாட்டு மைதானத்தில் காமராஜர் நற்பணி மன்ற இளைஞர்கள் சார்பில் நடத்த இருந்த 30 அணிகள் பங்குபெறும் மின்னொளி கபடி போட்டிக்கு சகாயநகர் ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி வழங்க மறுப்பு.
அதனை தொடர்ந்து கபடி வீரர்கள், காமராஜர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் அனுமதி வழங்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கபடி வீரர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ பங்கேற்று வருகிறார்.
நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான, பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
