நீலகிரி மாவட்டம் கூடலூர்
மேபில்ட் என்ற பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதியில் வனவிலங்குகள், காட்டுயானையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு கூடலூர் மேம்பில்ட் என்ற பகுதியில் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் நபரை உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இன்னும் எத்தனை உயிர்களை நாங்கள் பலி கொடுக்கப்பட வேண்டும் இந்த பகுதி மக்களின் வாழ்வாதார நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை நிறைவேறி பாதுகாப்பு கிடைக்குமா?
இல்லை....
யானையின் ஆதிக்கம் தொடருமா?

