ஆண்டிபட்டி பேரூராட்சியின் மெத்தனத்தால் பாலாஜி நகர் மக்கள் நோய்த்தொற்றின் பிடியில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் பாலாஜி நகரில் சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக பாலாஜி நகரில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் கால்நடை சானங்களையும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் தற்போது பெய்து வரும் மழையால் கால்நடை சானங்கள் மழைநீரில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது தேங்கியுள்ள சாக்கடைகளாலும், கால்நடை சானங்களாலும்
,மாலை நேரங்களில் கொசுக்கள் அதிகமாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், இப்பகுதியிலிருந்து பொதுமக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்ற வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து பாலாஜி நகர் பொதுமக்கள் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் கொசுமருந்து அடிக்க வேண்டியும், தேங்கியுள்ள சாக்கடையையும், கால்நடை சானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டி பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் பேரூராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பேரூராட்சி நிர்வாகமானது பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க முன்வராமல் உட்கார்ந்திருக்கும் காரணம் என்ன என பொதுமக்கள் ஆண்டிட்டி பகுதியில் கொந்தளித்து வருகின்றனர்.மேலும், இப்பகுதியில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் பேரூராட்சி நிர்வாகம் பொறுப்பேற்குமா என சரமாரியாக கேள்வி
எழுந்துள்ளது.இதனை கருதி பாலாஜி நகர் பொதுமக்களுக்கு பெரிய அளவில் நோய்த்தொற்று ஏற்படும் முன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடி பார்வையிட்டு அப்பகுதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் புலம்புகின்றனர். பொதுமக்களின் புலம்பல்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீர்வு கொடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

