திரைத்துறையிலும், பொதுவாழ்விலும் கலைவாணர் என் அடைமொழிக்கு பொருத்தமான கலை மேதை என்.எஸ்.கிருஷ்ணன்!!
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின 116 வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு,எம்.ஆர்.காந்தி அவர்கள் மணிமேடை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்வில் திருவாளர்கள், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரோசிட்டா திருமால், 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில், மாநில பாஜக மீனவர் பிரிவு செயலாளர் சகாயம்,மேற்கு மண்டல தலைவர் சிவசீலன், சிறுபான்மை அணி பொதுசெயலாளர் ஜாக்சன், முன்னாள் நகர பொருளாளர் திருமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
