குமரி மாவட்ட தவப்புதல்வி அறக்கட்டளையின் நிறுவனரும் கேப் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனருமான பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களுக்கு மதுரையில் நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்வில் இணையவழி சவதேச கருத்தரங்கில் மூன்று மணி நேரத்தில் 1800 ஆராய்ச்சி கட்டுரைகள் எடுத்துரைக்கும் மாரத்தான் நிகழ்வினை ஜும் மற்றும் கூகிள் மீட் வழி வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்ததை முன்னிட்டு உலகசாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக சிவகங்கை இளைய மன்னர் மகேஷ்துரை அவர்கள் கலந்து கொண்டு விருது வழங்கினார்.
மூன்றி மணி நேரத்தில் தொடர் நிகழ்வாக 68 கூகிள் மீட் மூலம் ஆராய்ச்சி கட்டுரைகள் சர்வதேச அளவில் 40ற்க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைத்து அதிகப்படியான ஆராய்ச்சி கட்டுரைகளை உரைக்க செய்தது இதுவே குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் முதல் முறையாகும்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு, கேரளா, இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, துபாய், மகாராஷ்டிரா, கனடா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற பகுதிகளில் இருந்து 200 பேராசிரியர்களும், 250 ஆராய்ச்சியாளர்களும், 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் கலந்து ஆராய்ச்சி கட்டுரைகளை விளக்கியிருந்தனர்.
ஆராய்ச்சி மற்றும் கட்டுரை எழுதுதல் பல பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் மற்றும் தீர்வு காண பயன்படும் முக்கிய கருவியாகும், மற்றும் பிரச்சினைகளை குறைப்பதற்க்கான வழிகளை அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது.
சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அளவில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதும், அதனை பிரசுரம் செய்வதும் சமூகத்தின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிக்கும், இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தங்கள் கல்வியுடன் ஆராய்ச்சிக்கும் ஒரு பங்களிப்பு தர முயற்சிக்க வேண்டும் என ஆராய்ச்சி படைப்புகளுக்குகாக சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற முனைவர் சுபத்ரா செல்லத்துரை தெரிவித்தார்.
