எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு ரத வீதியில் முழுவதுமாக நிரம்பியுள்ள பெரிய தெப்பக்குளத்தை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் தெப்பக்குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கும்,நீர் செல்லும் பாதையினை சுத்தப்படுத்துவதற்கும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்
.நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர்
அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் வார்டு உறுப்பினர்கள் ஜெயலட்சுமி மணிகண்டன், மணிகண்டன் வார்டு செயலாளர்கள் பிச்சை,அருள் சுந்தர் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் இளைஞர் அணி பரமசிவம், சூர்யா உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

