வனத்துறையினர் பார்வை!
பார்வை மட்டும் போதாது நடவடிக்கை தேவை!!
வாழைத் தோட்டத்தில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் மணியக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணி என்பவரது வாழை தோட்டம் உள்ளது.
தோட்டத்தில் புகுந்து காட்டுப் பன்றிகள் கூட்டமாக புகுந்து வாழைகளை சாய்த்தது பின் வாழைமர அடி கிழங்குகளையும் பறித்து நாசமாக்கியது.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் வனசரகர் முருகேசன் வனவர் சக்திவேல் ஆகியோர் காட்டு பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளை பார்வையிட்டனர்.
