மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஆணைப்படி, ஈஞ்சாம்பாக்கம் தெற்கு பெத்தேல் நகரில் மிரட்டிய மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,அவர்கள் 5கிலோ அரிசி மற்றும் பெட்சீட் போன்ற உதவிகளை வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்வில் மாண்புமிகு தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த்ரமேஷ்,15வது மண்டலகுழுத்தலைவர் எ.மதியழகன் இருந்தனர். இவர்களுடன் 194வது கவுன்சிலர் விமலா கர்ணா, வட்ட செயலாளர் மாஸ்டர் எஸ்.கர்ணா,. மற்றும் மாவட்ட இளைஞர் அணி, கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே,கவுன்சிலர் விமலா கர்ணா அவர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிகளை செய்து வந்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட தெருக்களில் ஒடும் வெள்ளத்தண்ணீரில் இறங்கி மக்களின் வீடுகளுக்கு சென்று உதவிகளை செய்து வந்தார்.
அமைச்சர் கலந்து கொண்டு உதவிகள் செய்த இந்த தருணத்தில் கவுன்சிலர் விமலா கர்ணா உதவியதும் தெரியவந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
