கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பள்ளிக்கூடத்துக்கு போக முடியல...!? தினமும் மாணவர்களுக்கு திண்டாட்டம்!!

sen reporter
0


 ஊத்தங்கரையில் இருந்து  போச்சம்பள்ளிக்கு நாள்தோறும் வந்து செல்லும் மாணவர்களை ஏற்றி வரும் அரசு பேருந்து முன்னதாகவே போச்சம்பள்ளி வருவதால் பள்ளிக்கு வர முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.


 இலவசமாக மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்வதால் பேருந்துக்கு இழப்பு ஏற்படுவதாக முன்கூட்டியே ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்து இயக்குவதாக குற்றச்சாட்டை வைக்கின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓலைப்பட்டி, வீரியம் பட்டி பிரிவு சாலை, சிப்காட், சூலாகரை, பாராண்ட பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். 


இந்த மாணவர்கள் காலை வேளைகளில் ஊத்தங்கரையிலிருந்து வரும் U4 என்ற டவுன் பஸ்ஸில் பயணம் செய்வது வழக்கம்.


 இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் இலவச பயண அட்டையை கொண்டு பேருந்தில் பயணம் செய்வதாகவும் இதனால் டிப்போவிற்கு உரிய வருமானம் காட்ட முடியவில்லை என்றும்  பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பேருந்து 8:50க்கு போச்சம்பள்ளி பேருந்து நிலையம் வந்து அடையும் நிலையில் 8:20 மணி அளவில் போச்சம்பள்ளிக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.


 இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் விவசாயிகள் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


 இதனால் அவ்வழியாக வரும் டெம்போக்கள் இருசக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு வருகின்றனர்.  இதனால் இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் வரும்போது கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. 


இதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த மாணவன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதுகுறித்து மாணவர்கள் டிப்போ மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள டைமிங் சென்டரிலும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

 

இது குறித்து ஊத்தங்கரை டிப்போ மேனேஜர் மயில்வாகனம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இந்த பேருந்து ஊத்தங்கரையிலிருந்து 7:20 மணிக்கு எடுக்கப்பட்டு போச்சம்பள்ளிக்கு 8:50 முதல் 8:40 மணியளவில் வந்து சேரும் ஆனால் பேருந்து முன்னதாக எடுத்து செல்வது என்பது தெரியவில்லை இதுகுறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.


 தொடர்ந்து அவர்களை எச்சரிக்கை செய்கிறேன் இது குறித்து செய்தி வெளியிட வேண்டாம் இந்த ஒரு முறை மன்னிப்பு கொடுங்கள் என்று தகவல் தெரிவித்தார்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top