நான்கு ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவை தொடங்கியது.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவில் ஜித்தா நகருக்கு சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது.
அந்த விமான சேவை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் ஜித்தா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வருகிறது.
இதனால் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணத்திற்கு செல்பவர்களும் வேலைக்காக செல்பவர்களும் குவைத், பக்ரைன், துபாய், இலங்கை வழியாக செல்ல வேண்டி இருந்தது. இதனால் சவூதிக்கு அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் ஏற்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவை தொடங்கியது.
