தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு,
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்தும் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமை செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சங்கர் ஜிவால் இ. கா. ப., தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு. அபாஷ் குமார் இ.கா.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன் இ. ஆ. ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் திரு. வி. ராஜாராமன் இ. ஆ. ப., காவல்துறை கூடுதல் இயக்குனர் (ஆயுதப்படை)திரு. எச். எம். ஜெயராம் இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)