வழிகாட்டும் குறள் மணி (62).
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்(திருக்குறள் 623).
விளக்கம்:
துன்பம் வரும்போது அதற்காக வருந்திக் கலங்காமல், அந்த துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி, அதை வென்றிட முடியும். அத்தகைய இயல்பு கொண்டவராக திகழ்க.
.jpg)