வழிகாட்டும் குறள் மணி (67).
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்(திருக்குறள் 723)
விளக்கம்:
பகைவர் நடுவே அஞ்சாது புகுந்து போர்க்களத்தில் உயிரிழந்து விடுவோர் பலராவார். அவையில் அஞ்சாமல் பேச வல்லவர் சிலரே, அத்தகைய சொல்வன்மை கொண்டவராகத் திகழ்வீர்.