தமிழகத்தில் பதவி ஏற்றது முதல் பல வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை தமிழக அரசு பார்வையிட்டு நடவடிக்கை எடுக்குமா மக்கள் எதிர்பார்ப்பு!!!
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை தவிர அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் தான் பதவி ஏற்றது முதல் இன்றுவரை பல வருடங்களாக ஒரே இடத்தில் பணிபுரிவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்று அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தங்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்காமலும்,சரிவர நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடையாததாலும் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.மேலும், அரசுத்துறை அதிகாரிகள் பல வருடங்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதால் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற கோணத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை தட்டி கழித்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, மின்சாரத்துறை,பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆர்டிஓ அலுவலகம், காவல்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை, தீயணைப்பு துறைகளில் அதிகாரிகள் பல வருடங்களாக மக்களின் பிரச்சனைகளை கண்டும், காணாமலும், தங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டும் பல வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.கிராமப்புரங்களில் அரசு அதிகாரிகள் ஒரே இடத்தில் பணியாற்றி வருவது மட்டுமல்லாமல் கிராம மக்களின் பிரச்சனை, மற்றும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமலும், கண்டும் காணாமலும் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படாமல் பல வருடங்களாக ஒரே நாற்காலியில் அமர்ந்து வருவதும் காணப்படுகிறது. மேலும்,பல வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றியும் அங்கேயே பணி ஓய்வும் அடைகின்றனர். இதனால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் , அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமலும் அரசு அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் ஒரே இடத்தில் பணியாற்றுவதால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.இதனை கருதி தமிழக முதல்வர் மக்களின் புலம்பல்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.