கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் பார்வதி.
இன்று காலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் ஏறி சுசீந்திரம் கோவில் தேர்த்திருவிழாவுக்காக சென்றுள்ளார் பார்வதி.
சுசீந்திரம் பகுதியில் பேருந்து விட்டு இறங்கியவர் தனது கழுத்தை பார்த்த பொழுது கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.
உடனே இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கண்ணீருடன் புகார் தெரிவித்தார். தான் பயணித்த பேருந்து தன்னை இறக்கி விட்டு விட்டு சென்று விட்டதால் உடனடியாக அந்த பேருந்தை தொடர்பு கொண்டு தனது தங்கச் சங்கிலியை மீட்டு தருமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.