வழிகாட்டும் குறள் மணி(66).
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.
(திருக்குறள் 678)
விளக்கம்:
ஒரு செயலை செய்து முடிக்கும் போதே அதே வாய்ப்பில் வேறொரு செயலையும் முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அஃது ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.