தூத்துக்குடி மாவட்டம்: குலசேகரபட்டினம்: குலசை கடற்கரையில் ஜி.பி.முத்து: அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யாதீங்க; மன வருத்தத்தில் டிக்டாக் ஜி.பி.முத்து!

sen reporter
0


 தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் கடற்கரையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜி.பி.முத்து.


 அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யாதீங்க என்று குலசை கடற்கரையில் இருந்தவாறு வீடியோ ஒன்றை எடுத்து டிக்டாக் ஜி.பி.முத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார்.


நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால் அதிகம் கவனிக்கப்பட்ட இவர் தொடர்ந்து ஓ மை கோஸ்ட், பாபா பிளாக்ஷீப் உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். 


சின்னத்திரை, பெரிய திரையில் நடித்து வரும் ஜி.பி. முத்து  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


நண்பர்களே, நான் அப்படியே குலசை கடற்கரைக்கு வந்தேன். ஏன்னு கேட்டீங்கன்னா, நிம்மதியே இல்ல. ரொம்ப மனசங்கடமா இருக்கு. அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது.


 நமக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்யணும். அடுத்தவங்க இருக்காங்க, அவங்க வைக்குறாங்கன்னு யார் சொல்றதையும் கேட்க கூடாது. சில விஷயங்கள் செய்வதால் நல்லவர்களுடைய மன கஷ்டத்துக்கு ஆளாகி விடுகிறோம். 


இன்னைக்கு ஒரு சின்ன விஷயம் நடந்துச்சு. அது என் மனதை மிகவும் பாதித்து விட்டது. அதை நானே பேசி முடித்து விட்டேன். யாருமே உங்களுக்கு என்ன தோணுதோ அதை மட்டுமே செய்யுங்க. அடுத்தவங்க இருக்காங்கன்னு நினைக்காதீங்க என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.


என்ன காரணம் என அவர் தெரிவிக்காத நிலையில் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஜி.பி.முத்துவுக்கு உண்மையில் என்ன நடந்தது என தெரியவில்லை. 


ஆனால் நீங்கள் மனவருத்தப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top