தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்காட் குழும நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஸ்காட் குழும நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு தலைமை வகித்தார். துணை தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக செயின்ட் தாமஸ் குழும பள்ளிகளின் தாளாளர் அருள்தந்தை ராயப்பன் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் அருளுரை வழங்கினார்.
பின்னர், ஸ்காட் குழும நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு கிறிஸ்துமஸ் வாழ்த்துரை பேசுகையில், கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா. கடவுள் மனிதராக அவதரித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை செய்தவர். அவர் தன்னுயிரை கொடுத்து மக்களை காப்பாற்றியவர்.
எல்லோருக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைக்கும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நலத்திட்ட உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கினார். கிறிஸ்துமஸ் தாத்தா சான்டா குருஸ் வேடம் அணிந்த மாணவர்கள் நடன நிகழ்ச்சி நடந்தது.
மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. கல்லூரி வளாகத்தில் அனைத்து துறை சார்பில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் குடில்களை அழகுற அமைத்திருந்தனர். அவற்றில் சிறந்த குடில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குநர் சி.அருண்பாபு, ஸ்காட் குழும நிறுவனங்களின் தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு, பொதுமேலாளர்கள் கே.ஜெயக்குமார், எஸ்.கிருஷ்ணகுமார், இயக்குநர் முகமது சாதிக், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிண்டன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் விக்னேஷ் செய்திருந்தார்