விஜயகாந்த்துடன் நெருங்கிப் பழகிய தருணங்கள்.!

sen reporter
0


 நான் கல்லூரி படித்த காலத்தில் , ரஜினியும் கமலும் உச்சக்கட்ட நட்சத்திரங்களாக திகழ்ந்தனர்.அந்த சமயத்தில் தனக்கென ராஜபாட்டை அமைத்துக் கொண்டு புரட்சிக் கலைஞராக வளர்ந்தார்.

சண்டைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தார்.


பனைமரக் கருப்பு நிறம் கொண்ட ஒரு சினிமா கதா நாயகன் பெரும் நட்சத்திரமாக உருவெடுத்து வந்ததால் அவரை ஆதரிக்கும் வகையில் என் நண்பர்கள் குமார்,அன்புராஜா   ஆகியோருடன் அவர் படத்தை தேடிச் சென்று பார்த்தோம்.

அலங்கார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த அவருடைய" சாட்சி " படத்தை பலமுறை

பார்த்த ஞாபகம் உள்ளது.


என் குடும்பத்திலும் நிறைய பேர் அவருடைய ரசிகர்களாக மாறினர்.

"கேப்டன் பிரபாகரன் " படம் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது.

"கேப்டன்" என்று அவர் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப் படுவதற்கு

காரணமாக அமைந்தது.


நான் மாலைமுரசு செய்தியாளராக பணியாற்றியபோது 

சட்டமன்றத்தில் அவருடன் நெருக்கமாகப் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.


என் அருமை நண்பரும் தினபூமி செய்தியாளராக  பணியாற்றிய   கமலும் அவரும் நெருங்கிய நண்பர்கள். அவரை சட்ட மன்ற வளாகத்தில் பார்த்துவிட்டால் அருகில் வந்து ,தன் நாக்கை துருத்திக் கொண்டு குத்துவது போல் செல்லமாக பாவனை செய்வார். "நாக்கைத் துருத்தும் செயல்" அவரிடம் இயல்பாக வெளிப்பட்ட மேனரிசம்.

இந்த செயலையும் பின்னாளில் அவருக்கு எதிராக அரசியல் செய்யப் பயன்படுத்திக் கொண்டனர்.


நடிகர் சங்கத்துக்கு இருந்த பெரும் கடன் சுமை இவர் தலைவராக இருந்தபோதுதான் அடைபட்டது.

சினிமாவில் போல் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலாக செயல்படக் கூடியவர்.


தான்  சினிமா நட்சத்திரமாக உருவெடுத்த பிறகு

சாமானிய மக்களுக்கு சந்தடியின்றி நிறைய உதவிகள் செய்து வந்தார்.பின்னாளில் ,

அரசியலில் காலடி

வைத்தபோது  மக்களிடம் பேராதரவு கிடைக்க இவருடைய கடந்த கால செயல்கள்தான் காரணமாக இருந்தன.


 இவர் மூலம் ஒரு புதிய மாற்றத்தை

பரவலாக மக்கள் விரும்பினர்.அதன் விளைவுதான் இவரால் தனித்து நின்று எம்.எல்.ஏ, ஆக முடிந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக ஆகி தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தார்.


"  விஜயகாந்த்  ஒரு நல்ல 

மனிதர்,உடல் நலம் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும் "


என்ற வார்த்தை  பொது மக்களால் இன்றைக்கு 

உச்சரிக்கப்படுகிறது.

இது இவர் ஈட்டிய வெற்றியின் உச்சம்

எனலாம்.


     ம.வி.ராசதுரை.

       28.12.23

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top