சென்னை: தேமுதிகவின் தலைவர், நடிகர் விஜயகாந்த் மறைவு!? தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு! வைகோ இரங்கல்!

sen reporter
0


 தேமுதிக தலைவர் கேப்டன்  விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது.


நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரைஉலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர்.


ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர்.


தமிழ் மொழி, இன உணர்வுடன்  ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார்.


தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை  தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார்.


சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.


அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,தேமுதிக தொண்டர்களுக்கும் ,அவரை நேசிக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு தமது இரங்கல் செய்தியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top