கிருஷ்ணகிரி மாவட்ட தன்னார்வலர்கள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கே. எம். சரயு இ .ஆ.ப அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரிசி பருப்பு, பால் பவுடர் போர்வை ரொட்டி பிஸ்கட் தண்ணீர் பாட்டில் குழந்தைகளுக்கு தேவையான துணிமணிகள் நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே நிவாரண பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் நாளை சனிக்கிழமைக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கே. எம்.சரயு அவர்கள் தெரிவித்துள்ளார்.
