தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி மெயின் ரோட்டில் தொட்டியில் குப்பைக் கழிவுகள் இருப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், அப்பகுதியில் பள்ளி, கல்லூரி இருப்பதால் அந்த இடத்தை கடக்கும்போது துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், குப்பைக் கழிவுகள் உள்ள தொட்டியானது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து, குப்பைத்தொட்டியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தீ வைப்பதால் அருகில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து இந்நாள் வரை இராயப்பன்பட்டி ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
