வழிகாட்டும் குறள் மணி (75).
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்(திருக்குறள் 926).
விளக்கம் :
உறங்குகின்றவர் செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.அங்ஙனமே
கள்ளுண்பவர் அறிவு மயங்கியிருத்தலால் நஞ்சு உண்பவரே!
அதிகாரம் 93 கள்ளுண்ணாமை.