பிள்ளைத்தோப்பு மேலத்துறை பகுதியில் தனபால் என்பவர் ஊருக்கு சொந்தமான இடத்தில் கழிவு நீர் தொட்டி கட்டியதால் அதை உடனடியாக அகற்றக் கோரி ஊர் பொதுமக்கள் சாலை மறியல் குளச்சல் டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை.
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிள்ளைத்தோப்பு மேலத்துறை பகுதியை சேர்ந்தவர் தனபால்.
இவர் அந்த பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு தனபால் தனது வீட்டிற்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியினை பிள்ளைத்தோப்பு ஊருக்கு சொந்தமான இடத்தில் சாலையை ஒட்டி கட்டி உள்ளார்.
பிள்ளைத்தோப்பு ஊர் பங்கு பேரவையில் எந்த ஒரு அனுமதியும் வாங்காமல் ஊர் இடத்தில் கழிவு நீர் தொட்டி கட்டியதை உடனடியாக அகற்றக்கோரி ஊர் பொதுமக்கள் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் அளித்து ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று பிள்ளைத்தோப்பு மேலதுறை பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு வந்த குளச்சல் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
