நாமக்கலில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக முதலமைச்சர் சட்ட சபை தேர்தலின் போது அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வூதியர் சத்துணவு மற்றும் அங்கன்வாடி போன்ற ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10% வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவரை இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில செயற்கைக்கோள் உறுப்பினர் செல்வம் வரவேற்ற மாவட்ட இணைச்செயலாளர்கள் சண்முகம் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
