நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட விபரங்களை அறிய உதவும் 'இ- கோர்ட்ஸ்' இணைய தளம், மொபைல் போன் செயலி சேவைகள் திடீரென முடங்கியுள்ளன.
இதன் காரணமாக வழக்குகளின் நிலை, தீர்ப்பு போன்ற விபரங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியான பிரச்னையால் அடிக்கடி சேவையை முடங்குவதால், பயன்படுத்த முடியாமல் அவதியுறுவதாக வழக்ககறிஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
