தேனி மாவட்டம்!!! ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!!!
12/11/2023
0
தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாlளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும்,மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வழங்கப்பட்ட சான்றிதழானது அறக்கட்டளை நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்தும்,மேலும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பணியாற்றிவரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
