தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காடுச்சிப்பள்ளி அருகே உள்ள முத்துராமன் தொட்டி ஒடையில் உரிய அனுமதியின்றி திருட்டு தனமாக ஒடை மண் எடுப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் சென்ற போது மண்
அள்ளி கொண்டு இருந்த டிரைவர் போலீசாரை பார்த்து வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
நிறுத்தி இருந்த வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி சுமார் 1 யூனிட் ஒடை மண் இருந்தது, மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்
.jpg)