நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள்- மனித மோதல் , தொடர்கதையாகவே உள்ளது.
இங்கு வசிக்கும் மக்கள் ஒரு காலத்தில் புலம்பெயர்ந்து மீண்டும் தாயகம் திரும்பி தோட்ட தொழில் செய்துவரும் மக்களை பயத்திலும், பரிதவிக்கவிடுவதிலுமே அரசும், வனத்துறையினரும் வரிந்து கட்டிக் கொண்டு போராடுவது ஏன்?
தமிழக முதல்வர் மற்ற இடற்பாடுகள், இயற்கை சீற்றங்களை பார்வையிட்டு தீர்வுகாணும்போது இவர்கள் பக்கமும் கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்... மக்களின் தெய்வம் முதல்வர் தான் என்பதில் ஐயமில்லை.
இப்பகுதியில் ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர் கடந்த சில மாதங்களாக கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் யானை கரடி சிறுத்தை புலி போன்றவை இப்பகுதியில் உலா வருகிறது.
இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் திடீரென வரும் வனவிலங்குகள் இப்பகுதியை சார்ந்தவை அல்ல என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
வேறு பகுதியில் இருந்து இது போன்ற கரடி புலி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இப்பகுதியில் விடப்பட்டுள்ளதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றார்.
இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வனவிலங்குகளை பிடித்து காப்பகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என இப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ஏலமன்னா பகுதியில் சிறுத்தை தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் அதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக உதகை மருத்து மனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அனுமதி,சரிதா, வள்ளியம்மாள்,துர்க்கா ஆகியோரை சிறுத்தை தாக்கியது. இவர்கள் பந்தலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருங்கரை பகுதிகளில் பகல் நேரங்களிலே சில நாட்களுக்கு முன்பாக ஆடுகளை அடித்து கொன்றது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் புலி மற்றும் சிறுத்தைகள் இப்பகுதியை சார்ந்தவை அல்ல இப்பகுதியில் சில நாட்களாகவே இப்பகுதியில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் பொது மக்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழக முதலமைச்சர் பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் புலிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
வனவிலங்களால் தாக்கப்பட்டு இன்னல்களை தாங்கி வாழ்ந்து வரும் மக்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை அரசு, மற்றும் இது தொடர்பான துறையினர் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.