தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சி மெயின் சாலையில் சாக்கடை விரிவாக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட இந்த நிலை உயிர்பலி வாங்க காத்து கொண்டிருக்கிறதா? என கோம்பை பேரூராட்சிநிர்வாகத்திடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோம்பையில் மெயின் சாலையில் சாக்கடையை விரிவாக்கம் செய்வதாக தோண்டப்பட்டு இதுநாள் வரை முழுமையாக தோண்டாமல் பாதியில் நிறுத்தி பணிகள் நடைபெறாமல் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கோம்பை பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் அது ஒப்பந்தக்காரர் வசம் உள்ளது.
நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என பதில் வருகிறது.சாக்கடை தோண்டப்பட்டு பாதியில் நிறுத்தியுள்ளதால் வங்கி, மற்றும் கோயிலுக்கு செல்பவர்களும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோம்பை பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு மற்றும் பொதுமக்களின் உயிரை மதிக்காமல் அலட்சியமாக பேசிவரும் நிர்வாகத்தால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்போவதாக பொருமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
மக்கள் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தும் முன் கோம்பை பேரூராட்சி துறையினர் உடனடியாக சாக்கடை கட்ட நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை நிறைவேறி சாக்கடை பிரச்சனை தீருமா?
இல்லை இன்னும் நாறுமா? என்பது சம்பந்தபட்டவர்கள் கையில்தான் உள்ளது.