தூத்துக்குடி: வரலாறு காணாத மழை வெள்ளம்: தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

sen reporter
0


 தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 

பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் ஆறு போ் தூத்துக்குடிக்கு வந்து வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தமிழ்நாடு வந்தார். 

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உடன் இருந்தார்.

அதற்கு முன்னதாக,  
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின்னர் குறிஞ்சிநகர் பகுதியில் வெள்ளதால் ஏற்பட்ட பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். 

அதன் பின்னர் கோரம்பள்ளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top