திருவள்ளூர் மாவட்டத்தில் முழுமையாக ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை கண்காணித்தால் இன்னும் பல அவலங்கள், அலைக்களிப்புகள் வெளிவரும் என பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர்.
கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தொடர்ந்து சம்பவங்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு. முதல்வர் கவனம் செலுத்தி திருவள்ளூரை திருத்தி, சீராக்கி திரு"வள்ளுவராக" மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பட்டா மாற்றம் செய்துதர கோரிய மனுவை 6 மாதம் பரிசீலிக்காமல் இருந்ததால் நடவடிக்கை.
வருவாய் துறையினரின் மெத்தனப் போக்கான செயல் கண்டனத்திற்குரியது என நீதிபதிகள் கருத்து.
உத்தரவு நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.