பந்தளம் அரச குடும்பத்தை சேர்ந்த அம்பிகா தம்புராட்டி (76) இன்று அதிகாலை காலமானார்.
அம்பிகா தம்புராட்டியின் மறைவையொட்டி, பந்தளம் அரண்மனை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் 11 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பந்தள அரண்மனை, அச்சன்கோயில் ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. ஐயப்பன் தான் தெய்வ வடிவம் என தெரியாமல் 12 ஆண்டுகள் இங்கு வளர்ந்ததாக கூறப்படுகிறது.
இங்கு ஐயப்பன் குளிப்பதற்காக கட்டப்பட்ட குளம் வெதுவெதுப்பாகவும், இதமாகவும் இருக்கும் என்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பு.
ஐயப்பனுக்கு மகரஜோதி அன்று அணிவிக்கப்படும் திருவாபரண பெட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரண பெட்டியை தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று.
மகர ஜோதியை முன்னிட்டு தற்போது பந்தளம் சாஸ்தா கோயிலில் ஏராளமான பகதர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பந்தளம் அரசு குடும்பத்தைச் சேர்ந்த அம்பிகா தம்புராட்டி (76) இன்று அதிகாலை காலமானார். அம்பிகா தம்புராட்டியின் மறைவையொட்டி, பந்தளம் அரண்மனை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் 11 நாட்களுக்கு மூடப்பட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் சபரிமலை சன்னிதானத்திற்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருஆபரணங்கள் எடுத்துச் செல்லப்படும் போது அரசு குடும்பத்தினர் யாரும் அதில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் திருவாபரண பெட்டி சபரிமலை செல்வதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பந்தள அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
.jpg)
.jpg)