வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை 284 பெண் காவலர்களுக்கான 7 மாத கால பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஐ.ஜி., ஆனவிஜயா ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில் ஐ.ஜி., முத்துசாமியும் கலந்துகொண்டு சிறப்பாக பயிற்சியை முடித்த காவலர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.
சட்டத்தில் அருணா ஸ்ரீயும், கவாத்தில் கனிமொழியும், துப்பாக்கி சுடுதலில் ஜனனியும் முதல் பரிசு வென்றனர். ஆல்ரவுண்டராக அருணாஸ்ரீ வெற்றி பெற்று அவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.
விழாவில் ஐ.ஜி முத்துசாமி பேசுகையில், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வாழ்வில் மேன்மையுறும் வகையில் அனைத்து மக்களுக்காகவும் நீங்கள் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பயிற்சி முடித்த பெண் காவலர்களிடம் கூறினார்.

