கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் சிறப்பு நிலை ஊராட்சிக்கு உட்பட்ட கல் குறும்பொற்றை கிராமத்தில் கல்கை இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் 2024ம் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் அழிவின் விழிம்பிலிருந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை தற்போதைய இளைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில் சிலம்பம், கபடி, போன்ற வீர விளையாட்டுகளையும்,
சிறுவர் சிறுமியர்களுக்கான பந்து எரிதல், பாட்டிலில் நீர் நிரப்புதல், மியூசிக் சேர், முறுக்கு கடித்தல், போன்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இளைஞர்களுக்கான கபடி, சிலம்பம், வடம் இழுத்தல், கண்களை கட்டிக்கொண்டு உரியடித்தல் மற்றும் வழுக்கை மரம் ஏறுதல்,
போன்ற போட்டிகள் திருமணம் முடிந்த ஆண்களுக்கும் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கும், பல் வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும், புலிப்பட தயாரிப்பாளரும், சமூக ஆர்வலருமான பி.டி.செல்வகுமார் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அப்பகுதி சிறுவர் சிறுமிகளிடமும், இளைஞர்களிடமும் , பொதுமக்களிடமும், தங்கள் பகுதி குறைகளை கேட்டு அறிந்த கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் மேடையில் பேசும் போது;
இளைஞர்கள் நன்றாக விளையாட வேண்டும் அது போல் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் , நாம் பயின்ற கல்வி மட்டும் தான் நாம் சாகும் வரை உடன் வரும், அது போல் நன்றாக விளையாடி உடம்பை நல்லமுறையில் உடற்ப்பயிற்ச்சி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் விளையாட்டு துறையில் நீங்கள் சிறந்து விளங்கினால் விளையாட்டு வீரர்களுக்கு என்று பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றது என்றும்,
அனைவரும் இப்போது இருப்பது போல் ஏப்போதும் ஒற்றுமையாக இருக்க பழகி கொள்ள வேண்டும் இளைஞர்கள்தான் இந்தியாவின் வருங்கால தூண்கள் எனவே இளைஞர்கள் வருங்கால இந்தியாவை உறுவாக்க வேண்டும் , அப்துல்கலாமின் கனவை நினைவாக்க வேண்டும் இதில் இளைஞர்களுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாக நானும் இருப்பேன் என இளைஞர்களுக்கு நல் அறிவுரைகளை கூறினார்.
அப்பகுதி சிறுவர் , சிறுமியர் தாங்கள் விளையாடுவதற்க்கு எங்கள் கிராமத்தில் விளையாட்டு பூங்கா அமைத்து தர வேண்டும் என தங்கள் கோரிக்கையை முன் வைத்ததின் பேரில் உடனடியாக நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
அதே போன்று அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல தலமுறைகளாக நாங்கள் இந்த கல் குறும் பொற்றை பகுதியில் வாழ்ந்து வருகிறோம், எத்தனையோ கட்சியினர் மாறி, மாறி, நாட்டை ஆண்டு வந்து கொண்டு இருக்கின்றனர். இது வரையிலும் எந்த அரசியல் வாதிகளும் எங்கள் பகுதிகளுக்கு வந்து பார்வையிட்டு எங்களுக்கு ஒரு சமுதாய நலக் கூடம் அமைத்து தர முயற்ச்சி கூட செய்ததில்லை ஆகையால் எங்களது நீண்ட நாள் கோரிக்கையான சமுதாய நலக் கூடம் தங்கள் ஊருக்கு அமைத்து தறும்படி கோரிக்கை வைத்தனர்.
அதனை உடனே கட்டி தருவதாக பொதுமக்களிடம் உறுதியளித்து அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை அப்பகுதி மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜன், மாவட்ட பொருளாளர் சிவராஜன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் எஸ்.வி . பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் கல் குறும்பொற்றை
இளைஞர் நற்பணி மன்ற கௌரவத் தலைவர் முன்னாள் ராணுவ வீரர் மகேஷ், தலைவர் பொன் சுந்தர்பால், செயலாளர் மாணிக்கராஜா, பொருளாளர் பால் முருகன், உப தலைவர் கவிமார்சல் ,
கவுரவ உறுப்பினர்கள் எட்வின், பாபு, மது, மார்ஷல், சதீஷ் மற்றும் உறுப்பினர்கள் பெமின், வசந்த், நாஞ்சில் ஞானதாஸ், பிரவீன், விஜய், அஸ்வின், வர்ஷத், நவீன், ரதீஷ், கெட்சோன், அனீஸ், அஸ்வின், அபிஷேக், அருண், மனோசிங், பாரத், பார்த்திபன் ராஜேந்திரன் செல்ட்டன், செல்சன், தனிஷ், நரேஷ், ராஜேஷ், சுரேஷ்,மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

