நாமக்கலில் வருகிற ஒன்பதாம் தேதி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அனைத்து பேச்சு போட்டி நடைபெற இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023-2024 ஆண்டுக்கு நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு வருகிற ஒன்பதாம் தேதி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கு 10ஆம் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும் கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுபட்டுள்ளது.
இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் +1மற்றும் +2 படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மாணவிகளும் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உமா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
