திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசாமி கோவிலில் மாட்டுபொங்கல் முன்னிட்டு சிறப்புபூஜைகள் நடைபெற்றது, இந்த சிறப்பு பூஜையில் தமிழகம் முழுவதும் இருந்து 50, ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த சிறப்பு தரிசனத்தில் ,மதுரை,கோவை, திருச்சி, நெல்லை,தூத்துக்குடி, தேனீ, குமுளி, கம்பம், புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,ஆகிய ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காலை முதல் மாலை வரை சாமிதரிசனம் செய்தனர்,இதில் சிறப்பு நிகழ்ச்சி பால் அபிசேகம் நடைபெற்றது, இவ்விழாவிற்கு ஏற்பாடுகளை கோபிநாதசாமி கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் அறங்காவலர் குழு சிறப்பாக செய்து உள்ளனர்.
