பெரணமல்லூர் அருகே அதிமுக சார்பில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுமார் 500 பேருக்கு வேட்டி, சேலையினை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் வழங்கினார்.
பெரணமல்லூர் அடுத்த பூங்குணம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஏகேஎஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். வர்த்தக அணி அவை தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். இதில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன் கலந்து கொண்டு பூங்குணம் பகுதியில் உள்ள சுமார் 500 பேருக்கு வேட்டி, சேலை வழங்கி பேசினார். இது நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
