பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயர விராட விஸ்வரூப மகாவிஷ்ணு கோயில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கோயிலில் 108அடி மகாவிஷ்ணு சிலைக்கான பெரிய பாற கருங்கல் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் உள்ள கொரக்கோட்டை கிராமத்திலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு இஞ்சிமேடு, பெரணமல்லூர் வழியே எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையார் சிவன் கோயிலுக்கு நேற்று வந்த விஸ்வரூப மகாவிஷ்ணு கோயில் நிர்வாக குழுவினர்கள் சுவாமியை வழிபட்டனர்.
பின்னர் பக்தர்களிடம் கூறுகையில், 108 அடி உயர விஸ்வரூப மகாவிஷ்ணு கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதாகவும், இதில் சுவாமி சிலை கீழே வைப்பதற்கான யந்திரம், தங்கம், வெள்ளி, நவரத்தினம் அடங்கிய பேழை மற்றும் திருமண் காப்பு உள்ளிட்ட பொருட்கள் திவ்ய தேச கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த கோயில் வளாகத்தில் பக்தர்களின் வழிபாட்டிற்கு வரும் மார்ச் மாதம் 8ம் தேதி வரை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
